நீ வளர்ந்த பிறகு என்னவாக ஆக விரும்புகிறாய்? விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சிறுவனின் பதில்!
நிருபர் ஒருவர் பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு சிறுவனிடம் கேள்வியெழுப்பிய சம்பவம் ஒன்று நகைச்சுவையை ஏற்படுத்தியதோடு அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வீடியோவில், நிருபர் ஒருவர் சிறுவர்கள் குழுமியிருக்கும் இடத்திற்கு சென்று ஒரு சிறுவனிடம் சாதாரண தொனியில் ஒரு கேள்வியை கேட்கிறார்.
அதாவது நீ வளர்ந்த பிறகு என்னவாக ஆக விரும்புகிறாய் ? என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு அந்த சிறுவன் சிறிதும் தயக்கம் காட்டாமல், துணிச்சலாக 'இப்போது நாங்கள் படிக்கவே இல்லை, அப்புறம் நாங்க என்னவா ஆகுறது? என்று கேட்டுவிட்டு பின்னர் நான் வளர்ந்த பிறகு வேலைக்கு செல்வேன்.
ஒரு வீட்டை கட்டி அங்கு குடியேறுவேன், நன்றாக சாப்பிடுவேன், திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் இருப்பேன், மேலும் அப்போது எனக்கு 2 அல்லது 3 குழந்தைகள் கூட இருக்கும்" என்று நகைச்சுவையான பதிலை அளித்தான்.
இதனை கேட்ட நிருபரும் சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.