இனி 1 கிராம் தங்கம் 3700 மட்டுமே... வந்தாச்சு 9K தங்கம் - முழு விபரம்
தற்போது உள்ளதை விட இனிவரும் காலங்களிலும் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். எனவே இதற்கு ஒரு தீர்வாக 9K தங்கம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
தங்கத்தின் முக்கியதுவம்
தங்கம் என்பது தற்போது பலருக்கும் ஒரு முக்கிய பொருளாக மாறிவிட்டது. இந்த தங்கத்திற்கு பெண்கள் மிகவும் பிரியமாக இருக்கின்றனர். அதிலும் தங்கத்தை அதிகமாக விரும்பும் நாடாக இருப்பது இந்தியா தான்.
இந்த தங்கம் அலங்கார ஆடம்பர பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது வளியில் மங்காத காரணத்தினால் இதில் ஆபரணங்கள் செய்யும் மோகம் பெண்களிடம் அதிகமாக இருக்கின்றது.
சமீப காலமாக தங்கத்தின் விலையில் ஏற்ற தாழ்வு வருவதுடன் லட்டசக்கணக்கில் விலையும் உயர்ந்து செல்கின்றது. மக்கள் இதை முதலீட்டு பொருளாக பார்த்து அதிக அளவிலான தங்கத்தை முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் தங்கம் வாங்கி சேமிக்கவும், தங்கத்தில் மூதலீடு செய்யவும் விருப்புபவர்கள் தங்க பார்களாகவும், நாணயங்களாகவும் வாங்க தொடங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் என்று பரவலாகக் கருதப்படும் இந்தியாவில் தங்க விற்பனையில் 60 சதவீத சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு சிலர் தங்கத்தின் மீதான ஆசையில் தூய்மை குறைவாக அதாவது 18 கேரட், 14 கேரட் அளவில் உள்ள தங்க நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்தை கவனித்த மத்திய அரசு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மாதம் 9 காரட் தங்கத்தை தர நிர்ணய அமைப்பின் (BIS) ஹால்மார்க்கிங்கில் சேர்த்துள்ளது.
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க வகைகள்
அந்த வகையில் BIS அமைப்பு கட்டாய ஹால்மார்க் பிரிவில் 9 கேரட் நகைகளை சேர்த்துள்ள நிலையில், இனி ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பட்டியலில் 24KF, 24KS, 23K, 22K, 20K, 18K, 14K உடன் தற்போது 9K சேர்க்கப்பட்டுள்ளது.
24K மற்றும் 9K தங்கத்திற்கு இடையிலான வேறுபாடு - 24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 தூய்மையான சுத்தமான தங்கமாகும்.
அதேநேரத்தில், 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5%ல் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதாவது 9 கேரட் தங்கத்தில் 1000 கிராமில் 375 மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும்.
9K தங்கத்தின் முக்கியதுவம்
தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு வருவதால் தங்கம் வாங்க அதுவும் குறைந்த பட்ஜெட்டில் வாங்க மக்களுக்கு இந்த 9 காரட் தங்கம் ஒரு சிறந்த வாய்ப்பு.
இதனால் தற்போது மக்களின் தங்கத்திலான முதலீட்டு ஆர்வம் 9K தங்கத்தில் பாய்ந்துள்ளது. ஏனெனில் 24 காரட் தங்கத்துடன் ஒப்பிடுகையில், 9 காரட் தங்கத்தின் விலையும் குறைவு, இதை வடிவமைப்பதும் எளிதும்.
எனவே குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த 9 காரட் தங்கம் அதிகமாக நீடித்து உழைக்கக் கூடியது, இது தினசரி அணியும் மோதிரங்கள், சாதாரண நகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
தற்போது 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,053க்கும் ஒரு சவரன் ரூ.80,424க்கும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் 9 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,700க்கும், ஒரு சவரன் ரூ.29,600க்கும் விற்பனையாகிறது.
அடுத்தடுத்து தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்திற்கு 9 காரட் தங்கத்தை சாரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |