96 ஜானு இப்போ என்ன செய்கின்றார்? அல்டரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்
நடிகை கௌரி ஜி கிஷனின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இவர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தவர்.
அந்தப் படத்தில் சிறு வயது த்ரிஷாவாக தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தார்.
கியூட் பள்ளி மாணவியாக மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் ஜானு கவர்ந்திருந்தார். தற்போது கௌரி ஜி கிஷன் தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதோடு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கீர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காகித ராக்கெட் படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார்.
இதற்கிடையே கதாநாயகி வாய்ப்பை தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகைகள் இவர் அண்மையில் வெளியீட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.



