96 பட நடிகை கௌரி கிஷனின் புது லுக் எப்படி இருக்குன்னு பாருங்க... குவியும் லைக்குகள்
96 திரைப்பட நடிகை கௌரி கிஷன் ட்ரெண்டிங் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி ஜானு கதாப்பாத்தில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். குட்டி ஜானுவாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அந்த படம் இவருக்கு இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும், அடையாளத்தையும் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்பமத்தில் ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தினார். பின்னர் தனுஷுடன் கர்ணன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அண்மைகாலமாக கிளாமரில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து கௌரி கிஷன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.



