நோன்பு கஞ்சியுடன் உணவுக்குழாய்க்கு சென்ற பல் செட்! 93 வயது பாட்டி மீண்டது எப்படி?
சென்னையில் 93 வயது மூதாட்டி ஒருவர் நோன்பு கஞ்சியுடன் பல் செட்டையும் சேர்த்து விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல் செட்டை விழுங்கிய மூதாட்டி
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரஷியா பேகம்(93). இவர் கடந்த புதன் கிழமை நோன்பு முடிந்து மாலை நோன்பு கஞ்சி குடித்துள்ளார்.
அப்பொழுது இவர் வாயில் அணிந்திருந்த பல்செட்டும் நோன்பு கஞ்சியுடன் உணவுக்குழாயிற்குள் சென்றுள்ளது.
கொக்கி போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த பல்செட் உணவுக்குழாயில் சிக்கியதால் வலி அதிகமாகியுள்ளது. உடனே மூதாட்டியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனாலும் மூச்சு விடமுடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்ததால், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டிக்கு ஏற்கனவே ரத்த அணுக்கள், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சினை உள்ள நிலையில், மூதாட்டி விழுங்கிய பல் செட்டை உள்நோக்கி கருவி மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
4 மணிநேரம் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையால் தற்போது மூதாட்டி குணமடைந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |