இந்த 9 ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க.. ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!
பேஸ்புக் பயனர்களின் Login-களையும் Password-களையும் திருடும் 10 மால்வேர் ஆப்களை, டாக்டர் வெப்பின் (Doctor Web) பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அது பற்றி புகார் அளித்திருந்தனர்.
இதனால், கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட 9 ஆப்களையும் தன் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றி உள்ளது.
PIP Photo
பிஐபி போட்டோ என்பது ஒரு இமேஜ் எடிட்டிங் ஆப் ஆகும். Lillians-ஆல் உருவாக்கப்பட்டது, இது Android சாதனங்களில் 5,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
Processing Photo
இதுவும் ஒரு இமேஜ் எடிட்டிங் ஆப் ஆகும். Android சாதனங்களில் 5,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இது chikumburahamilton டெவலப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது.
Rubbish Cleaner
இது Android சாதனத்தின் செயல்திறனை மேம்படுத்த உதவும் ஒரு ஆப் ஆகும். 1,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப்பின் டெவலப்பர் SNT.rbcl. Horoscope Daily Android சாதனங்களில் 1,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ஜாதக ஆப்பின் டெவலப்பர் HscopeDaily momo. Inwell Fitness இதன் பெயர் குறிப்பிடுவது போல இது ஒரு உடற்பயிற்சி ஆப் ஆகும்.
இது Android சாதனங்களில் 5,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
App Lock Keep
Android சாதனங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள பிற ஆப்களில் உள்ள அணுக முடியாத அம்சங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் இந்த் 5,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் டெவலப்பர் ஷெராலா ரென்ஸ்.
Lockit Master
Android சாதனங்களில் 5,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த் ஆப்பின் டெவலப்பர் Enali mchicolo. Horoscope Pi இந்த ஜாதக ஆப் 1,000 க்கும் மேலான பதிவிறக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் டெவலப்பர் Talleyr Shauna.
App Lock Manager
10 க்கும் மேற்பட்ட நிறுவல்களைக் கொண்ட இந்த ஆப் மிகவும் பிரபலமான பெயரின் கீழ் கிடைக்கும் ஒரு ஆப் ஆகும். ஆனால் மால்வேரை கொண்ட இந்த குறிப்பிட்ட ஆப்பின் டெவலப்பர் Implummet col.