வாய்க்குள் போன இலைய துப்பிதுக்கு இவ்வளவு அபராதமா? 86 வயது முதியவருக்கு நடந்த சம்பவம்
இங்கிலாந்து லிங்கன்ஷையரில் வசிக்கும் 86 வயது முதியவர் ராய் மார்ஷுக்கு, நடைப்பயிற்சிக்குச் சென்றபோது நேர்ந்த ஒரு எதிர்பாராத சம்பவம் குறித்தவிடயம் தற்போது இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கெக்னஸ் அருகே வாக்கிங் சென்ற குறித்த முதியவர் பலத்த காற்றில் பறந்த ஒரு இலை திடீரென வாயிற்குள் வந்ததும் அதனை உடனடியாக வெளியில் துப்பியதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். குறித்த நபருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால், வாயினுள் சென்ற இலையையை உடனடியாக வெளியே துப்பிவிட்டார்.
ஆனால், இந்தச் செயல் அந்த நாட்டு சட்டத்தின் படி ‘குப்பை கொட்டுதல்’ எனப் பொருள்படுத்தப்பட்டதால், உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு £250 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000) அபராதம் விதித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலான தகவலை விரிவாக இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |