'டூயட்' பட நடிகர் ரமேஷ் அரவிந்தை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்றார்னு பாருங்க
80 களில்தென்னிந்திய சினிமாவில் முக்கியமாக நடிகராக வலம் வந்தவர் தான் ரமேஷ் அரவிந்த்.
நடிகர் ரமேஷ் அரவிந்த்
கே.பாலசந்தர் கன்னடத்தில் இயக்கிய சுந்தர ஸ்வப்னகலு என்ற படத்தின் மூலம் அந்த மொழியில் அறிமுகமான ரமேஷ் அரவிந்த், தமிழில் உறுதி வேண்டும் என்ற படம் மூலமாகவும், தெலுங்கில் ருத்ரவீணை படத்தின் மூலமும் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த ரமேஷ் அரவிந்த் 45க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 100க்கும் மேற்பட்ட கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியராகவும் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றிய இவர் தற்போது மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகவும் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
தற்போது சினிமா துறையில் இருந்து விலகி இருக்கும் ரமேஷ் கர்நாடகா மாநிலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களிலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என தன்னம்பிக்கையூட்டு வகையில் உறைகளை வழங்கிவருகின்றார்.
'ப்ரிதியிந்த ரமேஷ்' என கன்னடத்தில் அவர் வெளியிட்ட புத்தகம் 'அன்புடன் ரமேஷ்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |