60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் மனிதர்! கண்ணீர் விட்டு கூறிய ஒரே ஆசை
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர், கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமல் இருந்து வரும் நிகழ்வு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு தூக்கம் முக்கியம்
பொதுவாக ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும். சாப்பிடாமல் கூட அதிக நாட்கள் உயிர்வாழ முடியும்.. ஆனால் ஒரு மனிதன் 11 நாட்கள் தூங்காமல் இருந்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்பது மருத்துவரின் ஆலோசனை.
இவ்வளவு மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமாக இருக்கும் தூக்கத்தினை கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் நபரை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வியட்நாமின் க்யூ சன் மாவட்டத்தில் உள்ள க்யூ டிரங்க் நகரைச் சேர்ந்தவர் தாய் நகோக். இவரது சொந்த ஊரில் தாய் நகோக் என்றால் எவருக்கும் தெரியாது. ஆனால் தூங்காத மனிதர் என்றால் அனைவருக்கும் தெரியும் மனிதராக ஹாய் கோக் இருக்கிறார்.
கடந்த 1973ம் ஆண்டில் தாய் நகோக்கு திடீரென ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு பின்பு இவருக்கு தூக்கம் இல்லாமல் போயுள்ளது. எவ்வளவு தூங்குவதற்கு இவர் முயற்சித்தாலும், இவரது கண்களுக்கு தூக்கம் மட்டும் கடந்த 60 ஆண்டுகளாக வரவே இல்லையாம்.
மது அருந்தினால் தூக்கம் வந்துவிடும் என்று நினைத்து அதையும் முயற்சித்த இவருக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது. மருத்துவரையும் சந்தித்து தூக்க மாத்திரை எடுத்துள்ள இவருக்கு அப்பொழுதும் தோல்யே ஏற்பட்டுள்ளது.
மேலும் இவரது உடம்பில் தூக்கம் வராமல் இருப்பதற்கு ஏதேனும் பிரச்சினை என்று மருத்துவர்கள் சோதனை செய்த போது, சிறுநீரகத்தில் மட்டுமே சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். ஆனால் மற்றபடி இவரது உடம்பில் எந்தவொரு பாதிப்பும் இல்லைாயாம்.
தாய் நகோக் கூறுகையில், “20 வயதில் இருந்து தூக்கம் வரவில்லை. சில நேரங்களில் தூங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தூங்காமல் இருப்பது வெறுமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இவரது ஆசையும் வாழ்வில் ஒரு நாளாவது தூங்கிவிட வேண்டும் என்பது தான்.. என்று கூறி மிகவும் வேதனையடைந்துள்ளார்.