உலக அழகி போட்டியில் தெரிவான 80 வயது மூதாட்டி! தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
சோய் சூன்-ஹ்வா என்கிற 80 வயது மூதாட்டி கொரியாவின் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று தெரிவாகிய சம்பவம் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
80 வயது மூதாட்டி
அழகு ராணி போட்டி நீண்ட காலமாக பெண்களால் ஆதிக்கம் செலத்தி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டியில் பொதுவாக இளம் வயதினர் தான் பங்கு பற்றி வெற்றி பெறுவார்கள். ஆனால் தற்போது தென் கொரியாவைச் சேர்ந்த 80 வயதான சோய் சூன்-ஹ்வா என்ற மூதாட்டி பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இவருடன் போட்டியிட்டவர்கள் இவரின் பேரக்கழந்தைகளுக்கு சமமானவர்கள். இவர் இதில் கூறியது கருணை, அழகு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு வயது வரம்பு இல்லை என்பதை நிரூபிக்க அவர் தயாராக இருக்கிறார்.
இவர் கூறும் போது “நான் உலகை திகைக்க வைக்க விரும்புகிறேன்,” என்று சோய், போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக சிஎன்என்-ல் பேசும்போது கூறினார். “80 வயது முதியவர் எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மக்கள் கேட்பார்கள்.
அந்த உடலை அவள் எப்படி பராமரித்தார்? அவருடைய ரகசியம் என்ன?’’ போன்ற கேள்விகளும் அவர்களுக்கு எழும்.” என அவர் கூறினார்.இந்த நிலையில் அவர் காட்ட நினைப்பது 80 வயதிற்கு பிறகும் அவரின் வாழ்கை இளமையாக இருப்பவர்களை பொல துடிப்பாக தான் இருக்கும் என அவர் காட்ட விரும்புகிறார்.
இந்த போட்டி 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இந்த மூதாட்டி இதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டார். இந்த நிலையில் இதுவரை 73 ஆண்டுகள் கடந்து வந்த வரலாற்றில் இதுவே முதன் முதலாக மூதாட்டி பங்கேற்ற அண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |