கவனம் இல்லாமல் இருந்த பெற்றோர்! நகவெட்டியை விழுங்கிய 8 மாத குழந்தை
8 மாதக் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
குழந்தையின் தொண்டையில் நகவெட்டி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஒருவருக்கு, 8 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக ஒரு 5 செ.மீ., அளவிலான நக வெட்டியை விழுங்கியுள்ளது.
இதனை கண்டதும் பதறியடித்து பெற்றோர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், X-Ray எடுத்து பார்த்தபோது, நகவெட்டி சுமார் 15 செ.மீ., ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைக்குக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த நகவெட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

பெற்றோர்கள் கவனம் தேவை
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சுமார் 15 செ.மீ., ஆழத்தில் சிக்கியிருந்த நகவெட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளோம்.
தற்போது குழந்தை நலமாக உள்ளது. குழந்தைகளிடம் இருந்து இதுபோன்ற ஆயுதங்களை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாலும் சில பெற்றோர்கள் அதை கருத்தில் கொள்ளாமல் இருப்பதால இது போன்ற விளைவுகள் ஏற்படுகிறது.
எனவே இனியாவது குழந்தைகள் எளிதில் விழுங்கக்கூடிய பொருட்களை அதன் அருகில் வைக்க வேண்டாம்" என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.