படமெடுத்து ஆடிய 8 அடி நீளமான ராஜநாகம்... துளியும் பயமின்றி வாலைப் பிடித்து இழுந்து லாவகமாக துக்கிய பெண்! தீயாய் பரவும் புகைப்படம்
பெரும்பாலான மக்கள் பாம்பை கண்டால் பயந்து நடுங்குவார்கள். ஒரு சிலர் மட்டுமே அதனை பிடிக்கும் திறமையையும், தைரியத்தையும் பெற்றிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பெண்தான் ஒடிசா மாநிலத்தில் வாழ்ந்து வரும் சஸ்மிதி கோச்சாய்.
தங்கள் வசிப்பிடத்திற்கு அருகே எங்கேயாவது வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக சஸ்மிதிக்கும், அவரது கணவருக்கும் தான் வனத்துறையினரும், மக்களும் தகவல் கொடுப்பார்களாம்.

இந்த சூழலில்தான் மயூர்பஞ்ச் பகுதியில் ஒரு வீட்டுக்கு வெளியே 8 அடி நீளம் கொண்ட ராஜநாகம் இருப்பதாக சஸ்மிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரும் அவரது கணவரும் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். உடனடியாக செயலில் இறங்கிய சஸ்மிதி அந்த ராஜநாகத்தை மிக லாவகமாக தனது கையால் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
பிறகு அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. சஸ்மிதி ராஜநாகத்தைப் பிடித்திருக்கும் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதைப் பார்த்த பலரும் சஸ்மிதியின் தைரியத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வீரத்தில் பெண்கள் ஆண்களுக்கு எப்போது சளைத்தவர்கள் அல்லர் பற்றிய புறநானூறு பாடலே சாட்சி.
இப்போதும் அதுபோன்ற வீரப்பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வாழும் உதாரணமாகி இருக்கிறார் சஸ்மிதி.