7ஆம் அறிவு படத்தின் வில்லன் நடிகரா இது? வைரலாகும் தற்போதைய புகைப்படம்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 7ஆம் அறிவு படத்தில் வில்லனாக அசத்திய ஜான் ட்ரை நுயொனின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டுவருகின்றது.
7ஆம் அறிவு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் கூட்டணியில் உருவாகி 2011ல் வெளிவந்த திரைப்படம் தான் 7ஆம் அறிவு.
தழிழர் பண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிவியரல் ஆதாரங்களோடு பறைசாற்றிய இந்த திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஜான் ட்ரை நுயொன் இப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் டாங்க் லீ- யாக நடித்திருந்தவர் தான் ஜானி ட்ரை நுயொன்.
இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்த நடிகர் ஆவார். 7ஆம் அறிவு படத்தில் இவர் செய்யும் ஆக்ஷன், தற்காப்பு கலை நோக்குவர்மம் ஆகியவற்றை இன்றளவும் மக்களால் மறக்கவே முடியாது.
இப்படத்திற்கு பின் அதர்வா நடிப்பில் வெளிவந்த இரும்பு குதிரை படத்திலும் ஜான் ட்ரை நுயொன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தழிழ் சினிமா பக்கம் வராத, நடிகர் ஜானி ட்ரை நுயொனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
