புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஐஸ் ஸ்கேட் செய்து அசத்தல்.. இணையத்தில் வைரல்!
77 வயதான தாத்தா ஒருவர் ஐஸ் ஸ்கேட் மூலம் சாகசம் செய்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிப்பவர் ரிச்சர்ட் எப்ஸ்டீன்(77). இவர் அண்மையில் ஸ்கேட் செய்து அசத்தி இருக்கிறார்.
இந்த வீடியோவை அவரது மகள் ரெபெக்கா பாஸ்டியன் ட்விட்டர் பக்கதிலும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர், எனது அப்பா 77 வயதிலும் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ் ஸ்கேட் பயிற்சியில் இறங்கினார். தற்போது அவரது பயிற்சியாளருடன் ஸ்கேட் செய்து வருகிறார் என வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ வைரலானதால் அவர், மகிழ்ச்சி. நான் எப்போதுமே சிறந்த தடகள வீரனாக இருக்க வேண்டுமென விரும்புகிறவன் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
My father is 77 years old and has stage 4 prostate cancer. He decided to learn how to ice skate a few years ago, and just did this performance with his teacher.
— Rebekah Bastian (@rebekah_bastian) December 9, 2021
For anyone that thinks it’s too late to try something new… ❤️ pic.twitter.com/0SZ3FmbNGE