74 வயது மாமனாரின் கோவத்திற்கு ஆளான மருமகள் சுட்டுக்கொலை
தனது சொந்த மருமகளை 74 வயது மாமனார், துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய புலம்பெயர் தமிழரான சிதல் சிங் என்பவரின் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்த சண்டையில் மருமகள், மகனை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார்.
துப்பாக்கிசூடு
இதனை கேட்ட சிதல் சிங், மருமகளை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனாலும் மருமகள் கேட்கவில்லை, இதனால் ஆத்திரமடைந்த சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலை செய்தார்.

இதனையடுத்து அவர் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
முதல்கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக தெரிவித்து இருந்ததால் ஆத்திரத்தில் சுட்டுக் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
