35 வயதில் மரணித்த மகன்... 71 வயதில் குழந்தை பெற்றெடுத்த பாட்டி! பின்பு நேர்ந்த சோகம்
கேரளா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் காயங்குளம் அடுத்துள்ள ராமபுரத்தில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவருக்கு சுதர்மா என்ற மனைவி இருக்கிறார்.(71) இவர்களுக்கு ஒரே மகன் சுரேந்தர்(35) . தற்போது துபாயில் பணியாற்றி வந்த நிலையில், மாரடைப்பினால் இறந்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த தம்பதிகள் தனது பேரக்குழந்தைகளைக் கொஞ்ச முடியாமல் வருந்தியநிலையில், சுதர்மா அவரது கணவரிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டுமெனக் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் ஆழப்புலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இதற்காக முயற்சி மேற்கொண்ட போது, உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியும், தம்பதிகள் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவர் கடந்த 32 வாரங்களுக்கு முன்னர் டெஸ்ட் டியூப் முறையில் சுதர்மாவுக்கு கருத்தரிக்கச் செய்த நிலையில், தற்போது சில தினங்களுக்கு முன்பு ஆபரேசன் மூலம் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குறித்த குழந்தை 1 கிலோ 100 கிராம் எடையுள்ள நிலையில், குழந்தையினை ஐசியூவில் வைத்து 40 நாட்கள் சிகிச்சையளித்துள்ள நிலையில், குழந்தையின் எடை 1350 கிராம் வந்ததும், ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர் கூறியதன் பேரில் வீட்டிற்கு குழந்தையுடன் தம்பதிகள் வந்துள்ளனர்.
வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு ஸ்ரீலட்சுமி என்று பெயர் சூட்டிய வயதான தம்பதி மகிழ்ச்சியுடன் குழந்தையோடு பொழுதை கழித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த 5 நாளில் குழந்தை அசைவற்று காணப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியதையடுத்து, வயதான தம்பதிகள் அழுது புலம்பியுள்ளது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.