71 வயதில் கூடைப்பந்து விளையாடி இளைஞர்களை திணற வைத்த பாட்டி - ட்ரெண்டிங் வீடியோ!
பொதுவாக சாதிக்க வயதில்லை என்று சொல்வதை கேட்டும் பலரையும் பார்த்து வியந்து இருப்போம்.
அந்த வகையில், பாட்டி ஒருவர் அற்புதமாக கூடைப்பந்து விளையாடிய வீடியோ ஒன்று இணையவாசிகளால் கவரப்பட்டு வருகிறது.
மெக்சிகோவை சேர்ந்த 71 வயது முதியவரான ஆண்ட்ரியா கார்சியா லோபஸ் ஓக்ஸாக்காவின் சான் எஸ்டெபன் அட்டாட்லாஹுகா நகரில் கூடைப்பந்து விளையாடி அசத்தி இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியதை அடுத்து, லோபஸ் "Granny Jordan" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
மேலும், பாட்டி விளையாடுவதை அவரது பேரன் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதுமட்டுமின்றி, எதிர்தரப்பு அணியினரை லோபஸ் சுலபமாக சமாளித்து கூடைக்குள் பந்தை வீசுவது அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
