பாடசாலை படிக்கும் போதே 70000 சம்பளமா? இலங்கை மாணவனின் சுவாரஸ்யமான பின்னணி
இலங்கையில் தனது இசை ஆர்வத்தால் பாடசாலையில் கல்வி கற்கும் போதே மாதம் 70000 சம்பளம் வாங்கு மாணவன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் துறையில் கல்வி கற்கும் ஒரு மாணவன் தான் இசைக்கலைஞர் கெமிலோ டனித்.
கொரோனா பரவத் தொடங்கிய நாட்களில் உலகமே முடக்க நிலையில் இருந்தபோது, உயிரிழப்புகளை பார்த்து மக்கள் அனைவரும் மரண பீதியில் மனதளவிலும் உடலளவிலும் விரக்தியில் இருந்த போதும் 17 வயதான டனித் தனித்துவமாக செயற்பட்டு அவரின் இசை பயணத்துக்கு பிள்ளையார் சுழியை போட்டுக்கொண்டவர்.
நோய் பரவும் கடினமான சூழலை, தனக்கு பிடித்த இசையை கற்பதற்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்ட இவர் தற்போது பல இந்திய இசைக்கலைஞர்களுடனும் பணியாற்றி வருவதுடன் பாடசாலையில் கல்வி கற்கும் போதே மாதம் 70000 வரையில் சம்பாதித்து வருகின்றார்.
மாணவன் மற்றும் இசைக்கலைஞர் கெமிலோ டனிதின் முழு கதையும் இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |