19 வயது பெண்ணின் பாடலுக்கு மயங்கிய 70 வயது முதியவர்! கல்யாணமே பண்ணிட்டாங்களாம்
பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை 70 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கிங் சென்ற போது ஏற்பட்ட காதல்
பாகிஸ்தான் லாகூர் நகரைச் சேர்ந்த லியாகத் அலி(70). அதே பகுதியைச் சேர்ந்த சுமைல்லா ஆலி(19).... இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது சேனலில் குறித்த தம்பதிகளின் நேர்காணல் குறித்து காணொளியினை வெளியிட்டுள்ளார்.
காதலுக்கு கண்ணில்லை... வயது வித்தியாசம் கிடையாது என்பதை அவ்வப்போது பல நிகழ்வுகள் உண்மையாக்கி வருகின்றது.
இதில் பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவி்த்த நிலையில், அவர்களை சமாதானம் செய்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
சுமைல்லா நன்றாக பாடுவாராம். வாக்கிங் சென்ற இடத்தில் சுமைல்லாவைச் சந்தித்த முதியவர் அவரது பாடலுக்கு மயங்கி அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.