இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்! நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்தும்
இந்தியாவில் 70 வயதான முதியவர் ஒருவர் தள்ளாத வயதிலும் பொரி விற்று வாழ்க்கையை நடத்துவது இன்றைய கால இளைஞர்களின் வாழ்வில் தன்னம்பிக்கையை விதைக்கிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி பாய், (வயது 70), தினமும் சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
காலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்துவிட்டு, மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை நாக்பூரில் உள்ள காந்தி பாக் மற்றும் இட்வார் பகுதியில் சைக்கிளில் மசாலா பொரி விற்று வருகிறார்.
காவலாளியாக பணியாற்றுவதில் கிடைக்கும் ஊதியம் செலவுகளுக்கு போதாமல் இருக்கவே, பொரி விற்று செலவுகளை சமாளித்து வருகிறாராம் ஜெயந்தி பாய்.
இந்த வீடியோவை அபினவ் ஜெஸ்வானி என்பவர் தனது சமூகவலைதளத்தில் பகிர, வைரலாகி வருகிறது, பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.