ஃபிரிட்ஜை சுத்த செய்யவதற்கு இவ்வளவு சிரமமா? சுலபமான டிப்ஸ் இதோ
வீட்டில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியை சுலபமாக சுத்தம் செய்யும் டிப்ஸை இங்கு தெரிந்துகொள்வோம்.
பொதுவாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் வார இறுதியில் தான் வீட்டை சுத்தம் செய்வார்கள். அப்பொழுது குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாகவே இருக்கின்றது.
குளிர்சாதனப்பெட்டியை சுலபமாக சுத்தம் செய்ய
குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்யும் முன்பு அதிலிருக்கும் அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வைத்த பின்பே சுத்தம் செய்யவும். ஒவ்வொரு அடுக்காக சுத்தம் செய்தால் நேரம் அதிகமாக எடுக்கும்.
அடுக்குகளை வெளியே எடுத்து அதனை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊறவைத்துவிட்டு, ஃபிரிட்ஜின் உட்புறங்களை சுத்தம் செய்ய ஆரம்பிக்கவும்.
வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து சுத்தம் செய்ய ஆரம்பிக்கவும். சுற்றிலும் உள்ள அழுக்கை எடுத்த பின்பு, உள்ளே உள்ள கரைகளை எடுத்துவிட்டு பின்பு வெளியே சுத்தம் செய்யவும்.
பின்பு உள்ளே வைத்திருந்த ஜுஸ், சாஸ் பாட்டில், உணவு பாத்திரங்கள் சுற்றிலும் நன்றாக துடைக்கவும். அவ்வாறு இல்லையெனில் நன்றாக இந்த பாட்டில்களை மூடிவிட்டு, தண்ணீரில் கழுவவும், மேலும் பிசுபிசுப்பு போகவில்லை எனில் சோடா மற்றும் சமையல் எண்ணெய் சம பங்கு எடுத்து நன்கு தேய்த்து கழுவவும்.
நீங்கள் அனைத்தும் துடைத்து முடித்ததும், குளிர்சாதனப்பெட்டியில் இருக்கும் துர்நாற்றம் போவதற்கு, அரைகுறையாக வெட்டப்பட்ட எலுமிச்சையை எதாவது ஒரு அடுக்கில் வைக்கவும்.
நீண்ட காலம் வாசனை நீடிக்க வேண்டும் எனில், நீங்கள் விரும்பும் வாசனையுள்ள எஸேண்ஷியலை எண்ணெய்யை பஞ்சில் சிறிது ஊற்றி உருட்டி ஒரு அறை ஒன்றில் வைக்கவும்.
குளிர்சாதனப் பெட்டியை எளிதில் சுத்தமாக்க ஸ்பிரே பாட்டில் ஒன்றில் 1 கப் வெதுவெதுப்பான தண்ணீர், அரை கப் வெள்ளை வினிகர், 2 டீஸ்பூன் வெண்ணிலா சாறு கலந்து பயன்படுத்தினால், சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |