மட்டன் வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 7 பகுதிகள்.., என்னென்ன தெரியுமா?
மட்டன் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு அசைவ உணவாகும்.
மட்டனில் பிரியாணி, குழம்பு, எலும்பு சூப் மற்றும் மிளகு வறுவல் போன்ற பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
இந்நிலையில், உடல்நல பாதிப்பைத் தவிர்க்க மட்டனின் சில பகுதிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், மட்டன் வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 7 பகுதிகள் என்னென்ன என்பது குறித்து பாரக்கலாம்.
என்னென்ன பகுதிகள்?
1. பித்தப்பை- கல்லீரலுக்கு அருகில் இருக்கும் பித்தப்பையில் பித்தநீர் இருக்கும். அது உடைந்தால் கறி கசப்பாகி சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
2. சிறுநீர்ப்பை- இதில் சிறுநீர் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் பகுதியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. கழுத்து தசைநாண்கள- ஆட்டின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் நிற தசைநாண்கள் எளிதில் செரிமானமாகாது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.
4. நிணநீர் சுரப்பிகள்- கழுத்து மற்றும் கொழுப்புப் பகுதிகளில் இருக்கும் இந்த சுரப்பிகள் கிருமிகளை வடிகட்டும் பணியை செய்கின்றதால் இவற்றை தவிர்ப்பது பாதுகாப்பானது.
5. அடிவயிற்றுக் கொழுப்பு- இந்தப் பகுதியில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இதய நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
6. நுரையீரல்- காற்றில் உள்ள தூசி மற்றும் நுண்கிருமிகள் நுரையீரலில் இருக்க வாய்ப்புள்ளது.
7. சிறுகுடல், பெருங்குடல்- இவற்றை பலமுறை நன்றாக சுத்தம் செய்து மட்டுமே சமைக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.