68 வயசா? ஜிம்மில் மாஸ் காட்டும் பாட்டி - வாய்பிளக்க வைக்கும் வீடியோ
கடந்த சில நாட்களாக பாட்டி ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இன்று பலரும் உடல் எடையை குறைக்க, கட்டுமஸ்தான உடலுடன் வலம்வர ஜிம்மே கதி என்று கிடக்கிறார்கள்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட சர்வசாதாரணமாக உடற்பயிற்சி செய்வதை பார்த்திருப்பீர்கள்.
அப்படி, 68 வயதான போதும் இளைஞர்களை போன்று பாட்டி ஒருவர் உடற்பயிற்சிகளை செய்கிறார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அவரது மகனான Ajay Sangwan இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
வீடியோ வெளியிட்ட சில மணிநேரங்களில் Ajay Sangwan பக்கத்திற்கு பாலோயர்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாம், எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் மிக எளிதாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் இந்த வீடியோ பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்றால் மிகையல்ல.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |