61 வயதில் காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அமீர் கான்! யார் அந்த பெண்?
பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான் ஜூலை 5 ஆம் திகதி மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமீர்கான்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் அமீர்கான் தற்போது 61 வயதை எட்டியுள்ளார். ஏற்கனவே 2 திருமணங்கள் செய்திருந்தார். எனினும், மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றார்.

மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள்
கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அமீர்கான், இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரைபடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அவரது நடிப்பில் வெளியான ‘சித்தாரே சமீன் பர்’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது.மேலும், நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள்
இந்நிலையில், தற்போது 61 வயதான அமீர்கான், 47 வயதான கௌரி ஸ்ப்ராட் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இவர்கள் இருவரும் மிகவும் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமீர் கான் மற்றும் கௌரி இருவரும் திருமணம் செய்யாமலேயே கடந்த பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. எங்களுக்கு மனதளவில் திருமணம் நடந்துவிட்டது போலத் தான் என அமீர் கான் முன்பே ஒரு பேட்டியில் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |