மனைவி பிறந்த நாளுக்காக 60 லட்சம் செலவு செய்த கணவர்... மனைவியின் வைரல் பதிவு!
துபாயை சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால் 26 வயதான தனது மனைவி சவுதி அல் நடக்கின் பிறந்தநாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுதாக சவுதி அல் நடக் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் தனது கணவரிடம் இருந்து பெற்ற ஆடம்பரமான பரிசுகளை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாளில் மியு மியூவில் ஷாப்பிங் செய்ய ரூ.12 லட்சம் செலவழித்ததாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
பின்னர் ஹெர்ம்ஸ் பிராண்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் ரூ.29 லட்சம் விலை கொண்ட பரிசை வாங்கி கொடுத்துள்ளார்.
இதுதவிர அழகு சிகிச்சைகளுக்காகவும் நிறைய பணம் செலவழித்ததாகவும் மொத்தத்தில் அந்த ஒரு நாள் மட்டும் ரூ.60 லட்சத்து 74 ஆயிரத்து 120 தனக்காக கணவர் செலவழித்துள்ளதாக சவுதி அல் நடக் இந்த காணொளியில் பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் பலரும் பணத்தை வீணடிப்பதாக கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |