தள்ளுவண்டியில் படுத்திருந்த தந்தை! 3 கிலோ மீற்றர் தள்ளிச் சென்ற 6 வயது சிறுவன்
உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை தள்ளுவண்டியில் வைத்து 6 வயது சிறுவன் தள்ளிச் சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தள்ளுவண்டியில் தந்தை
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் Singrauli என்ற மாவட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை 6 வயது சிறுவன் ஒருவன், தனது தாயுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் வைத்து தள்ளி சென்றுள்ளார்.
சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவிற்கு தந்தையை இவ்வாறு அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளான். வீட்டிலிருந்து மருத்துவமனை வரை இவ்வாறு கொண்டு சென்ற சிறுவனின் நெகிழ்ச்சி காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
ஆம்புலன்ஸ் வராததால் அதற்காக காத்திருக்காமல் குறித்த சிறுவன் தனது தாயுடன் இவ்வாறு கொண்டுவந்து தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளான்.
शायद मध्य प्रदेश की एंबुलेंस गरीबों के लिए नहीं है,
— Sadaf Afreen صدف (@s_afreen7) February 11, 2023
इसलिए मरीज़ को ठेले पर लिटाकर अस्पताल ले जाया जा रहा है!!
वीडियो मे मरीज़ की पत्नी और बेटे ठेले को धक्का लगाकर ले जा रहे है!#MadhyaPradesh #सिंगरौलीhttps://t.co/7uIlBCDFZq pic.twitter.com/VD6N5nSUow