மாம்பழம் பறிக்க சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
இந்தியாவில் மாம்பழம் பறிக்க சென்ற போது, ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுமி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் பாகுபேரா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த 9 மற்றும் 12 வயது சிறுமியுடன், 6 வயது சிறுமியும் மாம்பழம் பறிக்க சென்றுள்ளார்.
அப்போது, மூவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது, ஒரு கட்டத்தில் 6 வயது சிறுமியை மற்ற இருவரும் சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளனர்.
சடலத்தை அப்படியே விட்டுவிட்டு எதுவும் தெரியாமல் வந்துள்ளனர், அடுத்த நாள் மாம்பழ தோப்பின் உரிமையாளர் சிறுமியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்ததுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள், சடலத்தை கைப்பற்றி விசாரணையை நடத்தினர், முதற்கட்ட விசாரணையில், 6 வயது சிறுமியை மற்ற இருவரும் இணைந்து கொன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமிகளை கைது செய்த போலீசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.