சர்வதேச பேஷன் ஷோவில் 6 வயது தமிழ் சிறுவன்! யார் இந்த குட்டி பையன் தெரியுமா?
சர்வதேச பேஷன் ஷோவில் தமிழ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் கலந்து கொள்ள போகும் தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கோவை-ராம்நகர் பகுதியை சேர்ந்த சிவகுமார்- கோமதி தம்பதிக்கு 6 வயதில் ராணா என்கிற மகன் இருக்கிறான். இந்த சிறுவனின் தந்தை துணிக்கடையும், தாயார் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர்.
கோமதியின் அழகு நிலையத்திற்கு ஓராடை வடிவமைப்பாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறுவன் ராணாவை பார்த்த அவர் உங்கள் மகனை ஏன் பேஷன் ஷோவில் பங்குபெற வைக்க கூடாது என்று கேட்டிருக்கிறார்.
Tamil Nadu| A 6-year-old boy from Coimbatore, Rana has been selected for the International fashion Show to be held in Dubai
— ANI (@ANI) November 21, 2021
"I love modeling & want to become Navy officer," said Rana
"He won over 13 awards so far in fashion modeling," said Rana's mother (20.11) pic.twitter.com/bhjexzvoz8
இதுகுறித்த யோசித்த பெற்றோர், தன் மகனை இதில் பங்குபெற வைக்க நினைத்து கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் பங்குபெற செய்தனர்.
தனது 3 வயதிலேயே கலந்து கொண்ட முதல் ஷோவிலேயே சிறுவன் பரிசை வென்றான்.
இதனையடுத்து பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, கோவா போன்ற இடங்களில் நடைபெற்ற ஜூனியர் பேஷன் ஷோக்களில் ராணாவை பங்குபெற செய்தனர். ராணாவும் அணைத்து போட்டிகளிலும் பரிசை வென்று குவித்தான் .
மேலும் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் மூலம் 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். நாளை துபாயில் நடைபெற உள்ள சர்வதேச பேஷன் ஷோவில் இந்த சிறுவன் பங்கு பெற போகிறான்.
இதில் 15 உலக நாடுகளை சேர்ந்த மாடல்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.