59 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் சீமான்.., அவரது டயட் ரகசியம் என்ன?
நடிகர், இயக்குநர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களைக் கொண்ட 59 வயதாகும் சீமான், உணவு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
டயட் ரகசியம் என்ன?
இவர் காலை உணவாக குதிரைவாலி கஞ்சி, சாமை அடை, தினை கஞ்சி, தினை உப்புமா போன்ற சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்கிறார்.
சில நேரங்களில் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளையும் சாப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.

உணவில் அரிசியின் அளவைக் குறைத்து, காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்கிறார்.
புரதச்சத்துக்காக முட்டை, சிக்கன், மீன் மற்றும் மாட்டுக்கறி உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்.
இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், அத்திப்பழம், வெள்ளரி விதை, பேரிச்சை, வால்நட்ஸ், முந்திரி மற்றும் பப்பாளிச் சாறு போன்றவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொள்கிறார்.
மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற்தகுதியை முறையாக பராமரித்து வருகிறார்.

மெஷின் புல்-டவுன், டம்பல்ஸ் மற்றும் கோர் பயிற்சிகள் உள்ளிட்ட வலிமை சார்ந்த உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார்.
மேலும், நீண்ட நேரம் நடக்கும் பழக்கத்தை அவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். நடக்கும்போது தொடர்ந்து தண்ணீர் குடிக்கிறார்.
இதனால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும் என்று செல்லப்படுகிறார்.
உணவு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றை தனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதே சீமானின் உடற்தகுதிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.