வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி போல பாலத்தையே திருடிய விசித்திரம்!
வடிவேலுவின் கிணற்றை காணோம் திரைப்பட காமெடி நிஜத்தில் அமெரிக்கா- ஓஹியோவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் அக்ரோனில் உள்ள ஒரு சிற்றோடைக்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியில் நிறுவப்பட்ட 58 அடி பாலத்தை திருடர்கள் திருடியுள்ளனர்.
நவம்பர் 3 ஆம் தேதி, பாலத்தில் உள்ள பலகைகளில் சில காணாமல் போயுள்ளது. ஒரு வாரம் கழித்து அங்கு பாலமே காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாலம், 2000வது ஆண்டில் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது.
ஆனால் பின்னர் அதை வேறொரு திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
58-foot pedestrian bridge stolen in Ohio#4YourMorninghttps://t.co/orteVtua57
— CBS4 Indy (@CBS4Indy) December 16, 2021
அதை பிரித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக, திறந்தவெளியாக இருந்த வயல்வெளியில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாலம் திருடப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பாலத்தை பிரித்து, அதில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்று பணம் சம்பாதிப்பதற்காக பாலம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், 10 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட இந்த சிறப்புப் பாலம், பாலிமர் அடிப்படையிலான பொருட்களால் ஆனது என்பது திருடர்களுக்கு தெரிந்திருக்காது பாவம்.
இந்த சிறப்பு பாலத்தின் மூலப்பொருட்களை விற்பதும், மறுசுழற்சி செய்வதும் கடினம் என்று போலீசார் தெரிவித்தனர். திருடர்கள் பாலத்தை பிரித்து எப்படி எடுத்துச் சென்றார்கள் என்று கேள்வி எழுகிறது.
இந்த வினோத திருட்டு போலீசாரை மட்டுமல்ல, கேட்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், திருடப்பட்ட பாலத்தின் மதிப்பு சுமார் முப்பது லட்சம் ரூபாய் ($40,000) என்று நகரின் பொறியியல் துறை மதிப்பிட்டுள்ளது.