மீனவர்களின் வலையில் மாட்டிக்கொண்ட மயில் மீன்! எடை 50 கிலோ
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது மிக அரியவகை மீனான கொப்பரைக்குல்லா மீன் சிக்கியது.
ராமேஸ்வரம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் 90 விசைப்படகுகளில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்றனர்.
இவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பிய போது, அவர்கள் வலையில் 2 கொப்பரைக்குலா மீன் சிக்கியிருந்தது. ஒரு மீன் 50 கிலோ எடையுடனும், மற்றொரு மீன் 40 கிலோ எடையுடனும் இருந்தது.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், மிக ஆழமான கடல் பகுதியில் வசிக்கக்கூடிய மீன் இதுவாகும், ஆபத்தான மீனும் கூட.
வலையை கிழித்துவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது, மீனவர்கள் கைகளை காயமாக்கிவிடும், இதனை மயில் மீன் என்றும் அழைக்கலாம் என தெரிவித்தார்.
