பணம், உடல்நிலையில் கவனம் தேவை - 2026ல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்
2026ஆம் ஆண்டு சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
2026ஆம் புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒவ்வொரு ராசியினருக்கு சில மாற்றங்களை கொண்டு வரும்.
வரும் இந்த 2026 இல் பல்வேறு கிரக பெயர்ச்சிகள் நடக்கப்போகின்றது. இதனால் 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் போன்ற நேர்மறை ஆற்றலை 2026ஆம் ஆண்டு கொண்டுவரும்.
ஆனால், சில ராசிகளுக்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியாயின் 2026ஆம் ஆண்டு எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எந்த ராசிகள் அதிகப்படியான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
கேதுவின் பார்வையால் 2026ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு குடும்பத்தினரிடம் வார்த்தைகளை சரியாக பேச வேண்டும்.
குடும்ப உறவுகளுக்கு இடையே சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவர் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பெரிய பிரச்னையாக வெடிக்கலாம் கவனம்.
மேலும், சில நேரங்களில் வேலையிழப்பு கூடு ஏற்படலாம். மேலும், தொழிலில் முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனை வரும்.
இதனால், உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும், மாணவர்கள் கல்வியில் சற்று பின்னடைவை சந்திப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 4வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார் கேது. இதன் காரணமாக, ரிஷப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷப ராசியினரின் சொத்து சார்ந்த வழக்குகளில் பிரச்னை அதிகரிக்கும். பூர்விக சொத்து கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மேலும், குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும்.
உறவினர்களிடம் தள்ளி இருப்பது நல்லது. எந்த ஒரு காரியங்களிலும் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதி சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும். உடன்பிறந்வர்கள் இடையே, தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும்.
காதல் உறவில் மனஸ்தாபங்கள் ஏற்படும். மேலும், வீண் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் பிரச்னை ஏற்படலாம்.
கன்னி
2026ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாகும். மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும்.
உங்களுக்கு 12வது வீட்டில் கேது மாற்றத்தை கொண்டு வருவதால், உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களின் போது சிறு விபத்துகள் ஏற்படலாம்.
இதன் மூலம் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். கடன் தொல்லை இருப்பதை விட மேலும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிகளின் ஜாதகத்தில் 9வது வீட்டில் கேது மாற்றத்தை கொண்டு வருவதால், குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். குறிப்பாக, தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம்.
முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படலாம்.
திருமண வாழ்க்கையில் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வேலையில் உயர் அதிகாரிகளிடம் அமைதியாக இருப்பது வேலையை தக்க வைக்க உதவும். எனவே, 2026ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்கார்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழக்கையில் தடைகள் உண்டாகும்.
குடும்ப உறவுகளில் பிரச்னைகள் ஏற்படலபாம். குடும்பத்தில் நிதி பிரச்னைகள் அதிகரிக்கும். கடன் பிரச்னைகளும் உயரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தோல்வியில் முடியக் கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |