5 வயது மகளை 15 முறை கத்தியால் குத்திக் கொன்ற தாய்: மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் நடந்தது என்ன?
கொரோனா அச்சம் காரணமாக தனது மகளை தாய் ஒருவர் 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி அன்று சாயாகி சிவானந்தம் என்கிற தனது ஐந்து வயது மகளை 15 முறை கத்தியால் குத்தி துடிதுடிக்க கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது சுதா கருணானந்தம்(36) படுகாயங்களுடன் வீட்டில் மயங்கி கிடந்ததுடன், அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்ததையடுத்து பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில், இலங்கையை சேர்ந்த இவர்கள் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து லண்டனில் வசித்து வந்துள்ளனர்.
சுதா கருணானந்தம் கடுமையான நோயினால் அவதிப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்ததால் மன உளைச்சலில் இருந்ததோடு, அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவினால் தான் இறந்துவிட்டால், மகளின் எதிர்காலத்தினை நினைத்து அச்சப்பட்ட அவர், மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குழந்தையை கொலை செய்வதற்கு முதல் நாள் இரவில், நான் இறந்துவிட்டால் என் குழந்தையை சரியாக கவனித்துக்கொள்வீர்களா என்று சுதா தன்னிடம் கேட்டதாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் கொரோனா வந்து எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டடது என்று கூறிய நீதிபதிகள், சுதாவை மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.