Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்
பொதுவாக தற்போது இருக்கும் பலர் செல்போன்கள் பயன்படுத்துகிறார்கள்.
அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் பயனாளிகளாக இருந்து வருகிறார்கள்.
அத்துடன் பல நிறுவனங்கள் கூகுளை அடிப்படையாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்படியொரு நவீன மயமாக்கல் இருந்தாலும் அதற்கென ஒரு சில கட்டுபாடுகள் உள்ளன. அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட சில விடயங்களை கூகுளில் நாம் தேட முடியாது.
மேலும் குறிப்பிட்ட விடயங்கள் மற்றும் போட்டோக்கள் தேடவும், பதிவேற்றவும் முடியாது. இந்த அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கலாம்.
அந்த வகையில் கூகுளில் மறந்தும் தேடக் கூடாத விடயங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இணையத்தில் தேடக் கூடாத விடயங்கள்
1. போதைப்பொருள் தயாரிப்பு அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் தொடர்பான விடயங்களை மறந்தும் கூகுளில் தேடாதீர்கள். இப்படி சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் நீங்கள் சில சமயங்களில் சிறைக்கு கூட செல்லலாம்.
2. கூகுளில் ஆபாசப் படங்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் போன்றவற்றை மறந்தும் தேட வேண்டாம். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது மற்றும் தயாரிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
3. வெடிகுண்டு தயாரிக்கும் முறை பற்றி இணையத்தில் தேட வேண்டாம். பாதுகாப்பு நிறுவனங்கள் இன்டர்நெட் பயன்பாட்டில் இதுபோன்ற தேடல்களைக் கண்காணித்து வருகின்றன. இப்படியான பயனர்கள் சிக்கினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம். எனவே தவறியும் வெடிகுண்டு தொழில்நுட்பம் பற்றித் தேட வேண்டாம்.
4. மருத்துவரின் முறையான அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்வது தொடர்பில் இணையத்தில் தேட வேண்டாம். இதனை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது. கருகலைப்பு செய்வது சட்டவிரோத குற்றமாகும். இதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் தெளிவாக உள்ளது.
5. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. இதனை மீறி வெளியிடும் பயனர்களுக்கு தண்டனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். அத்துடன் அவர்களின் குடும்பத்தை பற்றி விடயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |