அம்மன் கோவிலில் மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.., என்னென்ன தெரியுமா?
ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.
அம்மன் கோவில்களில் சில முக்கியமான மரபுகள் உள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
அதன்படி, அம்மன் கோவிலுக்கு செல்லும்போது சில தவறுகளை செய்யக்கூடாது என ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.
அந்தவகையில், அம்மன் கோவிலுக்கு சென்றால் மறந்தும் செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.

1. கோவில் வாசல் படியை மிதிக்கக் கூடாது
அம்மன் கோவிலுக்குள் நுழையும்போது வாசலில் இருக்கும் படியை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது மரபு. அந்தப் படியில் காவல் தெய்வங்கள் இருப்பதால், படியை மிதிப்பது அவமரியாதையாகக் கருதப்படுகிறது.
2. அம்மனை கண்களை மூடி வழிபடக் கூடாது
மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடும்போது அம்மனின் திருமேனியை பார்த்து வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.
3. எலுமிச்சை விளக்கை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக் கூடாது
அம்மன் கோவில்களில் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கை கோவில் பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் மட்டுமே எலுமிச்சை விளக்கை ஏற்ற வேண்டும் என்பது வழக்கம்.
4. கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் நிழலை மிதிக்கக் கூடாது
கோவிலில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் ராஜகோபுரத்தின் நிழலை மிதிக்கக் கூடாது என்பது ஆன்மிக நம்பிக்கை.
5. தவறான திசையில் வலம் வரக்கூடாது
அம்பாள் சன்னதியை ஆகம விதிகளுக்கு மாறாக தவறான திசையில் சுற்றி வரக்கூடாது என கூறப்படுகிறது. மேலும், அம்மன் கோவில்களில் 5 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பானது என்ற நம்பிக்கை உள்ளது.