மிரள வைக்கும் பட்ஜெட் விலையில் 4 வகையான Smartphone- முழு விவரம் இதோ
காலங்களில் செல்ல விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கிறது.
உலகிலுள்ள அனைத்து விடயங்களையும் கையிலுள்ள ஒரு சிறிய தொலைபேசி மூலம் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.
பாடசாலைக்கு சென்று படிக்கும் காலம் சென்று வீட்டில் இருந்தவாரே படிக்கும் தொழிநுட்பம் வந்து விட்டது. இதனால் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ நம் கையில் ஒரு போன் இல்லை என்றால் அது அவமானமாக பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
அதே சமயம் அந்த போன் சாதாரண போனாக இல்லாமல் ஸ்மார்ட் போனாக இருந்தால் நன்றாக இருக்கும் என தோணும்.
இப்படியான நேரங்களில் நமது பட்ஜெட்டிற்குள் ஸ்மார்ட் போன்கள் வாங்க வேண்டும் என பலரும் யோசிப்பார்கள்.
அந்த வகையில் சுமாராக ரூ. 7000 பட்ஜெட் என்னென்ன வகையான போன்களை வாங்கலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
1. Samsung
ரூ. 7000 ற்கு தொலைபேசி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Samsung Galaxy M01 Core smartphone வாங்கலாம்.இதில் 5.3 inch HD+ display மற்றும் 3000mAh Battery உள்ளது. இந்த மாடல் போன்களில் MediaTek MT6739 இருக்கிறது.
மேலும் இந்த போனில் Android Go versionஇயங்குவதால் ஒவ்வொரு செயல் திறனும் சீரானதாக இருக்கும். மற்றும் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமரா உள்ளது. புகைப்படங்கள் பார்ப்பதற்கு ஓரளவு நன்றாகவே இருக்கும்.
2. Redmi
Redmi 9A smartphone உங்கள் பட்ஜெட்டிற்குள் இருக்கும். இதில் 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த போனில் வீடியோக்கள், புகைப்படங்கள் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும். புதிய வகையான கேம்கள் விளையாட சிறந்த போன்.
இந்த போன் MediaTek Helio G25 உடன் வருகிறது. Multi-task மற்றும் பல apps வேகமாக இயங்கும். எந்தவித கோளாறுகளும் இல்லாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். மேலும் இதில் இருக்கும் Battery-5000mAh உள்ளது.
3. Realme
Realme C11 போன்கள் ரூ.7,000க்கும் குறைவான விலையில் வாங்கலாம். இந்த போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி இருக்கிறது. அத்துடன் Realme C11 ஃபோனில் MediaTek Helio G35 உள்ளது. இதனால் தினமும் பயன்படுத்தலாம். முதன்மை கேமரா 8MP மற்றும் மற்றும் முன்பக்க இருக்கும் கேமரா 5MP கொண்டுள்ளது.
4. Nokia
Nokia C3 போன்களில் 5.99 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 3040mAh பேட்டரி உள்ளது. இந்த வகையான போன்கள் Unisoc SC9863A உடன் வருகிறது. அத்துடன்8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமரா உள்ளது.
இது போன்று நல்ல போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவை நீண்ட நாள் பயன்பாட்டிற்கு சிறந்த போன்களாக பார்க்கப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |