Natural Tea: நோய்களை விரட்டியடிக்கும் சூப்பர் Drinks
வாய்வுத்தொல்லை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் தீர்வதற்கு இந்த தண்ணீரை குடிக்கலாம்.
மசாலா பொருட்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் பலருக்கும் உணவு செரிமானம் அடைய வெகு நேரம் ஆகும். இதனால் அவர்களுக்கு வாய்வு தொல்லை, அஜீரண கோளாறு, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இது மாதிரியான பிரச்சனை ஏற்படுபவர்கள் அதிக காரம் நிறைந்த உணவுகளையோ, மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகளையோ தவிர்ப்பது நல்லது.
1. இஞ்சி டீ (Ginger tea)
வாய்வுத்தொல்லை நீங்குவதற்கு காலை நேரங்களில் இஞ்சி டீயை குடிக்க வேண்டும். மேலும், இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி தேனில் கலந்தும் உட்கொள்ளலாம்.
மதிய நேரங்களில் சுக்கு பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதனை நீங்கள் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. சீரக தண்ணீர் (Cumin water)
குடலின் உள்பகுதியை சீராக வைத்திருக்க உதவும் சீரகத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் அசிடிட்டி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கலாம்.
சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அதனை காலையில் அப்படியே குடிக்கலாம். இல்லையென்றால் அதனால் கொதிக்க வைத்து டீயாகவும் குடிக்கலாம்.
3. பெருஞ்சீரக டீ
பெரும்பாலும் பலரும் அசைவ உணவை சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடுவார்கள். ஏனென்றால், பெருஞ்சீரகம் ஜீரணத்தை எளிதாக நடத்துவதற்கு உதவும்.
பெருஞ்சீரகத்தை பொடியாக்கி டீ போட்டு குடித்து வந்தால் அசிடிட்டி, வயிறு உப்பசம் போன்ற தொல்லைகள் நீங்கும்.
4. ஓமம் டீ
நெஞ்செரிச்சல் நீங்குவதற்கு ஓமம் ஒரு சிறந்த வழியாகும். மேலும் குமட்டல் மற்றும் வாய்வுத் தொல்லை ஆகியவை வராமல் இருப்பதற்கும் உதவும்.
இதற்கு ஓமத்தை ஊறவைக்க வேண்டும். பின்னர் அதில் டீ தயார் செய்து உணவுக்கு பிறகோ அல்லது இரவிலோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. கொத்தமல்லி நீர் (Coriander water)
அஜீரணக் கோளாறு, மந்தத் தன்மை, குடல் சார்ந்த பிரச்சனைகள் தீர்வதற்கு கொத்தமல்லி ஒரு நல்ல தீர்வாகும்.
இதற்கு கொத்தமல்லியை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதனை பருகலாம். மேலும், கொத்தமல்லி விதையை டீயாக கொதிக்க வைத்து குடித்தாலும் பிரச்னைகள் தீரும்.
மேற்கூறிய கட்டுரையில் கூறியவை அனைத்தும் தகவலுக்காக மட்டும் கூறப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |