மெழுகுவர்த்தியால் வாழ்க்கைக்கு கிடைக்கும் ஐந்து வரங்கள்! இனி எதை குறித்தும் கவலையே இருக்காது
பொதுவாக வீடுகளில் மெழுகுவர்த்தியின் பயன்படுத்துவார்கள். இந்த மெழுகுவர்த்தியினால் தீராத பல பிரச்சினைகள் தீரும் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், வீட்டில் இருப்பவர்கள் பண்டிகை நேரங்களில் அல்லது நிகழ்வுகளின் போது விளக்கு வைப்பதால் மனம் சார்ந்த பல நன்மைகள் கிடைக்கிறது என ஆராய்ச்சியில் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது வீடுகளில் வைக்கப்படும் சாதாரண மெழுகுவர்த்தி கூட உருகும் போது ஒரு விதமான வாசணையை தருகிறது.
இதனாலும் சில வீடுகளில் மின்சாரம் இல்லாத நேரங்களில் மெழுகுவர்த்தி வைப்பார்கள். இதில் வரும் ஒளி வீட்டிற்கு புது விதமான அழகைப் பெற்று தருகிறது.
அந்த வகையில் வீட்டில் மெழுகுவர்த்தி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
மெழுகுவர்த்தி ஒரு மனிதனின் வாழ்க்கையில் செய்யும் ஐந்து அற்புதங்கள்
1. ஆழ்ந்த உறக்கம்
பொதுவாக அதிக வேலைப்பழு காரணமாக சிலர் தூக்கம் இன்மை பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்கள் ஒரு வாசனை நிறைந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு, அந்த ஒளியில் தூங்கினால் நிம்மதியான ஒரு தூக்கம் கிடைக்குமாம்.
மேலும் இவ்வாறு தூங்குவதால் மன ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. அதனுடன் வயது மூதிர்ந்தவர்களுக்கு இது நல்லப்பழக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
2. நினைவாற்றலை
அதிகப்படுத்தும் நம்முடைய அழகான வாழ்க்கையில் நினைவாற்றல் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மெழுகுவர்த்தியை கொளுத்தி வைப்பதால் ஞாாபகச்சக்திகள் அதிகப்படுத்தப்படுகின்றன.
மேலும் வாசனை மெழுகுவர்த்திகள் மூளையில் சேமிக்கப்படும் இந்த நினைவகத்தை தூண்டி பல்வேறு விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
3.ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது
வாசனை நிறைந்த மெழுகுவர்த்திகளை கொளுத்துவதால் அதிலிருந்து வரும் வாசனை நமது மனதை அமைதிப்படுத்துகிறது.
இதனால் தான் முக்கியமான நிகழ்வுகளின் போது மெழுகுவர்த்திகள் வைக்கப்படுகிறது. தேவையற்ற சிந்தனைகளால் ஏற்படும் மனக் குழப்பம் நாம் தனியாக இருக்கும் போது நிம்மதியான ஒரு உணர்வை தோற்றுவிக்கிறது.
4. மன அழுத்தத்தில் இருந்து விடுதலை
அலங்காரத்திற்காக நாம் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகள் உடலில் உள்ள கார்டிசால் சுரப்பதை குறைத்தும் நம் மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய டோபோமைன் மற்றும் செரோடொனின் ஆகிய சுரப்பிகள் சுரப்பதை அதிகரிக்க செய்கிறது. இவை மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது.
5. ஆன்மீக வளர்ச்சி
யோகா, தியானம் போன்ற ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் மெழுகுவர்த்தியை பயன்படுத்துவார்கள். இந்த செயற்பாட்டால் அவர்களின் மனதை ஒரு நிலைப்படுத்துவார்கள்.
இதனால் இது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மெழுகுவர்த்தி என்பது பரீட்சைக்கு பேனை போன்றது.
மேலும் ஜாஸ்மின், லாவண்டர், பெப்பர் மின்ட் ஆகிய வாசனை மெழுகுவர்த்திகள், ஆன்மீக பயிற்சிகளின் போது மனதை புத்துணர்ச்சியுடன் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவுகிறது.