தமிழ் நாட்டில் இருந்து பைக்கில் நாட்டிற்கு நாடு சுற்றுலா பயணம் செல்ல வேண்டுமா? இதோ ஐந்து நாடுகள்
பயணம் என்பது மனித வாழ்க்கையில் இன்றுவரை பின்னிப்பிணைந்துள்ளது. நாள் முழுக்க வாரம் முழுக்க ஓடித்திரிந்து வேலை செய்வபவனுக்கு பயணம் என்பது அவசியம்.
இதை விட சிலர் ஆராய்தல், கண்டுபிடிப்பு மற்றும் சுதந்திரம் நிறைந்த சாகசங்களில் ஈடுபட அனுமதிக்கிறது. இது தவிர சாலைப்பயணம் செய்ய பலரும் விரும்புவார்கள்.
ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வண்டியை ஓட்டிச் செல்வதை விட, வேறொரு நாட்டிற்கே வண்டியை ஓட்டிச் செல்ல அனைவரும் விரும்புவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து பைக் மூலம் வேறு எந்த நாடுகளுக்கெல்லாம் செல்லலாம் என பார்க்கலாம்.
நேபாளம்
நேபாளம் ஒரு அழகான நாடு. இது தமிழ் நாட்டிலுந்து செல்ல மற்ற நாடுகளை விட குறைந்த தூரமும் உடையது. இங்கு செல்ல எளிமையாக அனுமதியும் பெறலாம்.
இந்தியா மக்களுக்கு இந்த நாட்டிற்குள் செல்ல விசா தேவை இல்லை. ஆனால் இங்கே நுழையும் போது நீங்கள் செல்லுபடியாகும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டைக் கொண்டு செல்ல வேண்டும்.
இங்கு பார்க்கக்கூடிய அம்சங்களில் எவரெஸ்ட் மலை, போகரா , காட்மண்டு துர்பர் சதுக்கம், ஜானகி கோயில் மற்றும் புத்த சாதுபம் ஆகிய இடங்களுக்கு நீங்கள் செல்லலாம்.
மியான்மார்
மியான்மர் சாலை பயணம் செய்ய மிகவும் முக்கியமான நாடாகும். இந்த நாட்டில் அற்புதமான காட்சிகள், புத்த கோயில்கள், நன்னீர் டால்பின்கள், மற்றும் கலாச்சாரத்திற்கு பிரபலமானது.
இந்த நாட்டிற்கு பைக்கில் செல்லலாம். ஆனால் இங்கே செல்லும் போது உங்களுக்கு வீசா, நிலப்பரப்பு பயண அனுமதி, உங்கள் வாகனத்திற்கான தற்காலிக இறக்குமதி அனுமதி மற்றும் சிறப்பு MMT அனுமதி ஆகியவை தேவைப்படும்.
பூட்டான்
அடுத்த நாடு பூட்டான். தூய்மையான நிலப்பரப்புகள், பணக்கார உயிரியல் மற்றும் நிலையான வாழ்க்கைக்கான உறுதிப்பாட்டிற்கு இந்த நாடு பெயர் பெற்றது .
இங்கே இருக்கும் முக்கிய சுற்றுலா அம்சங்களில் புத்த டோர்டென்மா, ரிம்புங் ஜோங் மற்றும் செலே லா பாஸ் ஆகியவை அடங்கும். பூட்டானுக்கு வாகனத்தில் செல்லும்போது, அற்புதமான இமயமலை மலைத்தொடர்கள் மற்றும் பல பூட்டானிய கிராமங்களை இங்கு பார்க்கலாம்.
இங்கே இந்திய குடிமக்கள் பூட்டானுக்கு செல்ல வீசா தேவையில்லை, ஆனால் பூன்ட்சோலிங் எல்லையில் வாகன முன்பதிவு சான்றிதழ் உங்களிடம் இருக்க வேண்டும்.
தாய்லாந்து
அடுத்தது தாய்லாந்த் இங்கே பைக்கில் நிச்சயம் செல்ல முடியும். இங்கே சாலைப் பயணம் மூலம் நீங்கள் சென்றால், மியான்மரின் கலாச்சார பொக்கிஷங்களை பார்த்துவிட்டு, கூடுதலாக தாய்லாந்தின் இயற்கை அழகுகளையும் ரசிக்க முடியும்.
தாய்லாந்துக்குள் நுழைய, உங்களுக்கு வருகையின் போது ஒரு மின்-வீசா தேவைப்படும். மேலும் மியான்மர் வழியாக பயணிக்க தேவையான அனைத்து வாகன ஆவணங்களும் நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டும்.
மலேசியா
இந்த பைக் சுற்றுலாவில் கடைசியாக இருக்கும் நாடு ஆனால் மிகவும் பிரியமான சுற்றுலா இடங்களுக்குள் மலேசியாவும் ஒன்று. இங்கு உயரமான கட்டிடங்களுடன், இந்து கோயில்கள், சீன சரணாலயங்கள் மற்றும் இயற்கை வளங்களின் வளமையுடன், இந்த நாட்டின் தனித்துவமான கலாச்சார நெறிமுறைகள் பார்க்க முடியும்.
மலேசியாவுக்கு, நீங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து வழியாக செல்ல வேண்டும். இந்திய குடிமக்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய வீசா தேவைப்படும்.
இங்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமம் மற்றும் உங்கள் வாகனத்திற்கான கார்னெட் (வாகனத்தின் தற்காலிக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான உத்தரவாதம்) போன்றவை தேவைப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |