தாய்மார்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னனு தெரியுமா?
முதல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதாவது புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக வீட்டில் எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தாய்ப்பால்
தாய்ப்பாலை அதிகரிக்க வீட்டில் அனேகமாக பயன்படுத்தும் காய்கறி முருங்கை காயாகும். தாயிடம் பால் அதிகமாக பால் இருந்தால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆகையால் தாய்மார்களும் குழந்தையும் ஊட்டச்சத்து மிகுந்த சரிவிகித டயட்டை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவும் பிரபலமான மூலிகைகளில் ஒன்று வெந்தயம்.
இதை இரவில் நீரில் ஊற வைத்து குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் இந்த வெந்தய நீரை குடித்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.
இதை தவிர கருஞ்சீரக நீர் இது கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய பெருங்குடல் வலி மற்றும் வாய்வுத்தொல்லையை குணப்படுத்தவும் உதவுகிறது.
எள்ளில் செய்த லட்டு இதில் கல்சிய சத்து இருக்கிறது. பாலுட்டும் தாய்மார்கள் இந்த எள் உருண்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனை இளந்தாய்மார்கள் அதிகமாக உண்ண வேண்டும். முருங்கை காய் ஜுஸை இரு மாதங்களுக்கு இரண்டு நேரம் அரை க்ளாஸ் குடித்து வந்தால் பால் சுரப்பு அதிகமாகும்.