இந்த 2025 இல் இந்திய மக்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் எவை?
தற்போது அமெரிக்காவில் எச்-1பி விசாவை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் இந்திய மக்கள் அதிக ஆண்டுகள் அமெரிக்காவின் கிரீன் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இதற்க பதிலாக வெளிநாட்டில் செட்டில் ஆகும் கனவுடன் இருப்பவர்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சில நாடுகளைப் பற்றி யோசிக்கலாம். அந்த நாடுகள் பற்றிய வபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரீன் கார்டு
பிரான்ஸ் | பிரான்ஸ்ஒரு ஐரோப்பிய நாடாகும். இங்கே ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததன் பின்னர் மாணவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் 'தற்காலிக குடியுரிமை அனுமதிக்கு' விண்ணப்பிக்க வேண்டும். இங்கே அனுமதி கிடைக்க முதுகலை படித்திருக்க வேண்டும். அல்லது சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். அனுமதி கிடைத்ததன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து நிரந்தர கடியுரிமை பெறலாம். |
அயர்லாந்து | இங்கே நிரந்தர குடியுரிமைக்கு 3 நிபந்தனைகள் உண்டு.மாணவர் விசாவில் வந்து உங்கள் படிப்பை முடிக்க வேண்டும். பிறகு பட்டதாரி விசா பெற்று ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை வேலை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி கிடைக்கும். |
நார்வே | இங்கே நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு குடியிருப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இத மட்டுதல்லாமல் நார்வே பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும். அங்கே நிதியில் உங்களுக்கான பணம் இருக்க வேண்டும். நோர்வே மொழி ரெிந்திருக்க வேண்டும்.உங்கள் பெயரில் குற்றவியல் பதிவு எதுவும் இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். |
நெதர்லாந்து | இந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற குறைந்தது ஐந்து வருடங்கள் அந்நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும். ஐந்தாண்டு நிபந்தனையை முடித்தவுடன், நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். |
ஜெர்மனி | ஜெர்மனியில் நிரந்தர குடியுரிமைக்கு அந்நாட்டில் படிப்பை முடித்த பின்னர் ஜெர்மனில் நிரந்தர குடியுரிமை பெறலாம். இதற்காக, இரண்டு வருட வேலைக்கான குடியிருப்பு அனுமதி பெறுவது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஜெர்மனியில் ஒரு வேலை தேட வேண்டும். ஜெர்மன் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் நிரந்தர குடியுரிமை பெறுவது எளிதாகும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |