குறைந்த பட்ஜெட்டில் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்: முக்கிய விபரங்கள் இதோ
குறைந்த பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போன்களின் விபரத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்போன்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் பாவிப்பவர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். சாதாரண மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்து ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால், பல வசதிகளை பெற முடியும்.
குறிப்பாக வாட்ஸ் அப், காணொளி, புகைப்படம், வீடியோ அழைப்பு இவற்றினை மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பல அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை 25 ஆயிரத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் வாங்க முடியும். அவ்வாறு குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
OnePlus Nord CE 4
6.7-இன்ச் AMOLED திரை கொண்ட இதில், 120Hz ரெப்ரெஷ் ரேட், மற்றும் Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் காணப்படுகின்றது. மேலும் 50MP பிரைமரி கேமரா 5,500mAh பேட்டரி மற்றும் 100W வேகமாக சார்ஜிங் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
IQOO Z9s Pro
6.77-இன்ச் AMOLED திரை கொண்ட இந்த ஸ்மார்ட் போனானது, 120Hz ரெப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் மற்றும் 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Poco F6
6.67-இன்ச் AMOLED திரையுடன் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட், Snapdragon 8s Gen 3 சிப்செட், 512GB வரை ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Infinix GT 20 Pro
6.78-இன்ச் AMOLED திரை கொண்ட இந்த போனில், 144Hz ரெப்ரெஷ் ரேட், MediaTek Dimensity 8200 Ultimate சிப்செட் மற்றும் 5,000mAh பேட்டரி மற்றும் 45W வேகமாக சார்ஜிங் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Motorola Edge 50 Neo
6.4-இன்ச் pOLED திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 120Hz ரெப்ரெஷ் ரேட், MediaTek Dimensity 7300 சிப்செட், 50MP பிரைமரி கேமரா மற்றும் IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |