சக்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் செய்ய வேண்டிய 5 வேலைகள்
தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கத்தால் அனேகமானோருக்கு இந்த நீரிழிவு நோய் வருகிறது.
ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
இது உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தப்பட்டு இந்த நோய் வருகிறது.
இதனால் உடலில் முதலில் பாதிக்கப்படுவது கண்களின் விளித்திரை தான். இதை ஆரோக்கியமான உணவு முறை கொண்டு சுலபமாக கட்டுப்படுத்தலாம். அது என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சக்கரை நோயாளிகள்
பாகற்காய் ஜூஸ்: பாகற்காய் கசப்பாக இருந்தாலும் இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொழுப்பு, கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.
எனவே சக்கரை நோயால் பாதிக்கபட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்து வந்தால் இந்த நோய்க்கு தீர்வு கொடுக்கும்.
எலுமிச்சை நீர்: எலுமிச்சை பல நன்மைகளை வழங்குகிறது. இது உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
எனவே காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை நீர் குடிப்பதால் சக்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நெல்லிக்காய் ஜூஸ்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான அமைப்பு பலப்படுத்தவும் உதவுகிறது.
இதில் ஆன்டி ஆன்ஷிடன்கள் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயை சுலபமாக கட்டுப்படுத்த முடியும்.எனவே தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வெந்தய தண்ணீர்: வெந்தயத்தில் பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது ரத்த சர்க்கரையை சாதாரண அளவில் வைத்திருக்க உதவுகிறது.
இதை ஊறவைத்த தண்ணீரை காலை வெந்தய விதையுடன் நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் சக்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
வெள்ளரி ஜூஸ்: வெள்ளரி நீரிழிவு நோயாளர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு காயாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளரி ஜுஸ் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |