49 வயதில் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கப் போகிறாரா ரம்பா... குஷியில் ரசிகர்கள்
நடிகை ரம்பா 16 ஆண்டுக்கு பின்பு சினிமாவில் மீண்டும் நடிக்கப்போவதாக தகவல் வளெியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வந்தார். முன்னணி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, உச்சத்தில் இருந்தார்.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 16 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியதுடன், நடிப்பதையும் நிறுத்தியுள்ளார்.

இவர் நடித்த படங்கள் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கின்றது. தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
சுமார் 16 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த ரம்பா, அவ்வப்போது சின்னத்திரையில் நடித்து வருகின்றார்.

மீண்டும் சினிமாவிற்குள் ரம்பா?
இந்நிலையில் வெள்ளித்திரையிலும் ரம்பா நடிக்க இருப்பதாகவும், இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு உடம்பினை ஸ்லிம்மாக வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி புதிய கதைகளையும் கேட்டு வருவதாகவும், அதில் ஓரிரு கதைகளை தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நடிகை ரம்பா கடைசியாக 2010ம் ஆண்டு பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது 16 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் தனது 49 வயதில் சினிமாவில் நடிக்க இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |