ஒருநாளைக்கு 110 மாத்திரை சாப்பிடும் நபர்... இளமையாக இருக்க இப்படியொரு செயலா?
அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் 18 வயது இளைஞராக வலம்வருவதற்கு ஒரு நாளைக்கு 110 மாத்திரைகளை எடுத்து வருகின்றார்.
இளமையாக இருக்க நினைத்த நபர்
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது இளமையை தக்கவைத்துக் கொள்வதற்கு 100க்கு மேற்பட்ட மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் வினோத சம்பவத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் தான் பிரைன் ஜான்சன். இவர் மூளையின் செயல்பாட்டை கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான kernal என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
உலகப் பணக்காரர்களில் 46வது இடத்தில் இருக்கும் இவர், தனது வாழ்க்கையில் ஒரு விசித்திரமான லட்சியத்தை கொண்டுள்ளார்.
எப்பொழுதும் தனது உடலை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அந்த லட்சியம். இதற்காக இவர் செய்யும் செயல்கள் பிரமிக்க வைக்கின்றது.
கொலாஜன் ஸ்பெர்மிடின் கிரியேட்டின் போன்ற பொருட்கள் நிரம்பிய கிரீன் ஜெயின்ட் (green gaint) smoothie என்று அழைக்கப்படும் பானத்தோடு தனது நாளை தொடங்கும் இவர், பெரும்பாலும் பச்சை காய்கறிகள் பழங்களை தான் உட்கொள்கின்றார்.
ஒரு நாளைக்கு 110 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் இவர், காலை 6 மணி முதல் 11 மணிக்குள் ஒரு நாளைக்கான உணவுகளை முடித்துக் கொள்கின்றார்.
வெளித்தோற்றத்தை மட்டுமின்றி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் இளமையாக வைத்துக்கொள்வதற்கு இவர் முயற்சித்து வருகின்றார்.
இதற்காக வருடத்திற்கு 2 மில்லியன் டாலர் பணத்தை அவர் செலவு செய்து வருவதுடன், இவரை சுற்றி அதிநவீன சாதனங்களை வைத்து கண்காணித்தும் வருகின்றனர்.
தனது ஆணுறுப்பில் தொடங்கி, மலம், குடல், மூளை என அனைத்தையும் கருவிகள் கொண்டு சோதனை செய்து வருவதுடன், மரணம் வரக்கூடாது என்பதற்காக காரை 16 கிலோ மீற்றர் வேகத்தில் தான் ஓட்டுகின்றார்.
அவ்வப்போது தனது 18 வயது மகனின் ரத்தத்தை தனக்குள் செலுத்திக் கொள்வதுடன், 20க்கும் மேற்பட்ட கருவிகளை உடம்பில் பொருத்திக் கொள்வதுடன், 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவையும் இவர் வைத்துள்ளார்.
தற்போது 46 வயதாகும் தான் இப்போது 18 வயது இளைஞராக தன்னை உணர்வதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |