45 வயது தொழிலதிபர் 18 வயது இளைஞர் போல் மாற முயற்சி! செலவு தொகையை கேட்டு தலைச்சுற்றி விழுந்த நெட்டிசன்கள்
18 வயது இளைஞராக அறுவை சிகிச்சை செய்து மாற முயற்சிக்கும் 45 வயது தொழிலதிபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
18 வயது இளைஞராக மாற முயற்சி
அமெரிக்காவை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க லாஸ் ஏஞ்செல்ஸை தளமாக கொண்ட நியூரோடெக்னாலஜி நிறுவனமான Kernel-லின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஜான்சன் பணியாற்றி வருகிறார்.
இவர் தன்னுடைய உடம்பை சில சிகிச்சைகளின் மூலம் 18 வயது இளைஞர் போல் மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறார்.
இவரின் ஆசையின் படி, இவர் ‘Project Blueprint’ எனப்படும் தொடர் சோதனையின் மூலம் தன்னுடை உடம்பில் இருக்கும் உறுப்புகளை 5.1 ஆண்டுகளாக குறைத்ததாகவும் இதற்காக 30 மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து அந்த குழுவின் சிகிச்சையின் பிரகாரம் உறுப்புக்களின் வயது மாற்றியமைத்தாகவும் தெரிவித்துள்ளார்.
1,977 சைவ கலோரிகளை உட்கொள்ள வேண்டுமாம்
இதனால் ஜாக்சன் தினமும் உடல் எடை, உடல் நிறை குறியீட்டெண், குளுக்கோஸ், இதய துடிப்பு மாறுபாடுகள் மற்றும் விழித்திருக்கும் போது உடல் வெப்பநிலை என்பவற்றை Biomarkers மூலம் கண்காணித்து குறித்து வருகிறாராம்.
இவரின் சிகிச்சையினால் உடல் பலவீனமடையாமல் பார்த்துக் கொள்வதோடு அதற்காக தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்தவுடன் சரியாக 1,977 சைவ கலோரிகளை உட்கொள்ள வேண்டும். அத்துடன் உடற்பயிற்சி தீவிரமாக பயிற்சிகள் செய்ய வேண்டும்.
மேலும், இவரின் உடல் மட்டுமன்றி இவர் உடம்பிலிருக்கும் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தசைநாண்கள், பற்கள், தோல், முடி, சிறுநீர்ப்பை, ஆண்குறி மற்றும் மலக்குடல் ஆகியவற்றையும் 18 வயது இளைஞருக்கு இருப்பது போன்று மாற்றியமைக்க விரும்புவதாகவும் மருத்துவ குழு தெரிவிக்கிறது.
சிகிச்சைக்காக செலவு செய்யவுள்ள தொகை
இந்நிலையில் இவரின் இது போன்ற சோதனைகளுக்கு, இந்த சிகிச்சையில் சுய தீங்கு மற்றும் சிதைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க பிரையன் ஜான்சன் சுமார் 2 மில்லியன் டொலர்களை செலவழிக்க உள்ளாராம்.
இதனை தொடர்ந்து இவரின் சிகிச்சைக்கான விடயங்களை சரியாக கடைப்பிடிக்க இவர் வருடம் வருடம் இந்த தொகையை செலவு செய்யவுள்ளராம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த பணத்தை“உங்களின் குடும்பத்தினருக்கே கொடுத்து செல்லாமே ஏன் வீண் செலவு செய்கிறீர்கள்” என புலம்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.