16 வயதான தோழியின் மகன் மீது காதல்! திருமணம் செய்த 41 வயது பெண்... 4 நாளில் பிரிந்த சோகம்
இந்தோனேஷியாவில் தோழியின் மகனை 41 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 நாளில் பிரிந்து வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தோழியின் மகன் மீது காதல்
இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த மரியானா(41) என்ற பெண்ணிற்கு லிசா(37) என்ற பெண் தோழியாக இருந்துள்ளார். லிசாவிற்கு கெவின்(16) என்ற மகன் இருக்கின்றார்.
கெவின் மரியானாவின் கடைக்கு அடிக்கடி திண்பண்டம் வாங்க சென்றுவந்த நிலையில், அவர் மீது மரியானாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.
பின்பு குறித்த சிறுவனின் தாய் சம்மதத்துடன் மரியானாவிற்கு கெவினுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணம் வைரலான நிலையில், நான்கு நாளில் பிரிந்துள்ளனர்.
இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இந்த விஷயம் சென்ற நிலையில், ஆண் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் 19 வயதில் திருமணம் செய்து கொள்வது தான் அங்குள்ள சட்டமாம்.
ஆதலால் குறித்த சிறுவன் மைனர் என்பதால் இருவரும் தனித்தனியாக அறையில் தூங்கவேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் பீதியடைந்த தாய் மரியானாவை தற்போது விவாகரத்து செய்துவிடுமாறு தனது மகனிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |