40 வயதாகும் த்ரிஷாவை மேக்கப் இல்லாமல் பார்த்ததுண்டா? இதோ வெளியான காட்சி
நடிகை திரிஷா மேக்கப் இல்லாமல் வெளியிட்ட காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
நடிகை திரிஷா
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்த நிலையில், இதனால் விஜய் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
தற்போது திரிஷா அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் விஜய் நடித்துவரும் GOAT படத்தில் திரிஷா கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்சினிமாவில் நிலைத்து நிற்கும் திரிஷா அடுத்தடுத்து வாய்ப்புகளை வரிசையாக பெற்று பிஸியாக இருக்கின்றார்.
மேக்கப் இல்லாத காட்சி
இந்நிலையில் திரிஷாவிற்கு தற்போது 40 வயதாகும் நிலையில், அழகில் கொஞ்சம் கூட பின்வாங்காமல் இளம்நடிகைகளை ஓவர் டேக் செய்து சென்று கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் மேக்கப் இல்லாமல் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கண்மணி அன்போடு காதலன் பாடல் பின்னணியில் ஒலிக்க; திரிஷா காருக்குள் இருந்தபடி க்யூட்டான எக்ஸ்பிரெஷனை கொடுக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்; துளி மேக்கப் இல்லையென்றாலும் அழகாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |