AI உதவியுடன் 40 வயது பெண்ணுக்கு பிறந்த முதல் குழந்தை- எங்கு நடந்த சம்பவம் தெரியுமா?
40 வயது பெண்ணுக்கு AI உதவியுடன் குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தி இணையவாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி அதிகமாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல துறைகளில் நுழைந்து பாரிய மாற்றங்களை கொண்டு வருகிறது.
இதன்படி, மருத்துவத் துறையிலும் ஏ.ஐ.யின் பயன்பாடு புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது.
ஐ.வி.எஃப். சிகிச்சை
உதாரணமாக, சமீபத்தில் நடந்த ஒரு மருத்துவச் சாதனை உலகையே திரும்பிப் பார்க்க செய்துள்ளது. அதாவது, நம்மிள் பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் செயற்கைக் கருத்தரித்தல் முறையான ஐ.வி.எஃப். சிகிச்சையை செய்துக் கொள்ள முடிவுச் செய்கிறார்கள்.
இம்முறையில், பெண்ணின் கருமுட்டையுடன், ஆய்வகச் சூழலில் விந்தணுவைச் சேர்த்து கரு உருவாக்கப்படும். அதன்பின்னர், தாயின் கருப்பையில் இது பொருத்தப்படும்.
இந்தச் சிகிச்சையின் சவாலான பகுதி என்பது கருமுட்டையுடன் இணைவதற்குச் ஆரோக்கியமான விந்தணுவைத் தேர்ந்தெடுப்பது தான். இந்த செயன்முறை வெறும் மனித கண்ணால் கண்டறிவது கடினமாகும். இந்த வேலையை எளிதாக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டன.
அதன் விளைவாக மெக்சிகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நாற்பது வயதான பெண் ஒருவருக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கருத்தரித்து செயன்முறை செய்யப்பட்டது.
Ai உதவியுடன் பிறந்த குழந்தை
குறித்த பெண், மருத்துவர்களை 9 மாதங்களுக்கு பின்னர் வியப்படையச் செய்யும் வகையில், ஆரோக்கியமான குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். இம்முறையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பிறந்த “முதல் குழந்தை” எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும், ஆய்வு நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது. இதில் கூறப்பட்டது போன்று முயற்சிக்கப்பட்ட சில கருமுட்டைகளில், பெரும்பாலானவை வெற்றிகரமாகக் கருவாக வளர்ந்துள்ளன.
அதில் ஒரு கருவே தற்போது ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்துள்ளது. இந்தச் சாதனை நுட்பமான மருத்துவச் செயல்முறைகளில் ஏ.ஐ யின் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |