இளைஞரை 40 நாளில் 7 முறை கடித்த பாம்பு! சனிக்கிழமை மட்டுமே டார்க்கெட்... உண்மை என்ன?
உத்தரபிரதேசத்தில் நபர் ஒருவரை சனிக்கிழமைகளில் பாம்பு கடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடாமல் கடிக்கும் பாம்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரைச் சேர்ந்த விகாஸ் துபே என்ற 24 வயது இளைஞரை பாம்பு அடிக்கடி கடித்து வருகின்றதாம்.
இதற்காக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்த அவர் பணம் முழுவதும் செலவழிந்துவிட்டதால், நிதி உதவி அளிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் பாம்பு விகாஸ் துபேவைக் கொத்தியபோது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு நாள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்து வீடு திரும்புகின்றார்.
அதிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரே நபரை பாம்பு தேடி வந்து கடிப்பது மிகவும் விசித்திரமானதாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் "அவரை உண்மையில் பாம்பு கடிக்கிறதா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரையும் விசாரிக்க வேண்டும் கூறியுள்ளனர்.
காரணம் ஒவ்வொரு சனிக்கிழமையும் பாம்பு கடித்துவிட்டதாக மருததுவமனையில் அனுமதிக்கப்படும் இவர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பவும் செய்கின்றார். இது வினோதமாக இருப்பதாக தலைமை மருத்துவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றது.
இது தொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். இதுபற்றி விசாரித்து மக்களுக்கு உண்மையைக் கூறுவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |